புத்தாண்டு பலன்கள் 2௦13 மேஷ ராசி

மேஷ இராசி
மேஷம்

அசுவதி, பரணி, கார்த்திகை 1–ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, , லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

சுகங்களும் சந்தோஷங்களும் கூடும்!

மற்றவர்கள் உங்களை தூக்கி பேசினாலும், தாக்கி பேசினாலும் ஒரே மனநிலையை பெற்றிருக்கும் மேஷ ராசி நேயர்களே!

வந்து விட்டது புத்தாண்டு! உங்கள் எண்ணம் ஈடேறும் விதத்தில் சந்திர பலத்தோடு வருடம் பிறக்கிறது. பிறக்கும்போதே உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெறுகிறார். அப்புறமென்ன உங்கள் காட்டில் மழைதான். உள்ளத்தில் நினைத்ததை எல்லாம் உடனுக்குடன் முடித்து காட்ட போகிறீர்கள். வெல்லம் போல பேசி உங்கள் மனதிற்கு வேதனையை கொடுத்தவர்கள் எல்லாம் இனி விலகி செல்ல போகிறார்கள்.

தனாதிபதியாக அள்ளிக்கொடுக்கும் சுக்ரன் விளங்குவதால் பணப்புழக்கம் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். மனப்பயம் வரும் போது மட்டும் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள். மற்ற நேரங்களில் எல்லாம் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டீர்கள்.

இந்த புத்தாண்டில் நீங்கள் மனதில் பதித்து வைத்துக் கொண்டு மறக்காமல் முன் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய நேரம் 2–3–2013 முதல் 21–5–2013 வரை. அந்த நேரத்தில் உங்கள் ராசி நாதன் செவ்வாய் சனியை பார்க்கிறார். அதன்பிறகும் கூட கடகத்தில் நீச்சம் பெறும் போதும் 20–8–2013 முதல் 8–10–2013 வரை செவ்வாய், சனியின் பார்வை இருக்கிறது.

இந்த நேரத்தில் எதையும் யோசித்தும், இறைவனை பூஜித்தும், இறைவனுக்குரிய துதிப்பாடல்களை வாசித்தும், அருகில் உள்ளவர்களை நேசித்தும் நடந்து கொண்டால் ஆசைகளும் அரங்கேறும். அமைதியும் கிடைக்கும்.

உங்கள் சுய ஜாதகத்தில் உள்ள கட்டங்களையும் புத்தாண்டில் உள்ள கிரக நிலைகளின் கட்டங்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். வருடப் பிறப்பு நாள், பெரிய கிரகங்களின் மாற்றங்கள் உருவாகும் நாள் ஆகிய நிகழ்வுகளின் போது நமது தெசாபுத்தியும், இணைந்து செயல்பட்டால் இமயத்தின் எல்லைக்கு நாம் செல்லலாம்.

சமய சந்தர்ப்பங்களெல்லாம் நமது வீட்டு வாயிலை நோக்கி வந்து கொண்டேயிருக்கும். கிரகங்களின் ஆதிக்கம் நன்றாக இருந்தால் துணிந்து எந்த காரியங்களையும் செய்யலாம். இல்லையேல் பணிந்து வணங்கி  பரிகாரங்களை செய்ய வேண்டும்.

2013–ம் ஆண்டு சுக்ரனுக்கு உரிய ஆண்டாக ஆறு எண் ஆதிக்கத்தில் அமைவதால் சுக்ர பலம் உங்கள் சுய ஜாதகத்தில் எப்படி இருக்கிறது என்பதை சரிபார்த்து கொள்வது நல்லது. ராசிநாதன் செவ்வாய், ஆண்டிற்குரிய சுக்ரன் இரண்டின் அடிப்படையிலும் உங்கள் தொழில் நிலையத்தின் பெயரை நீங்கள் அமைத்து கொண்டால் பண மழையில் நனையலாம்.

1–1–2013 முதல் 27–5–2013 வரை

வருடத் தொடக்கத்தில் குரு 2–ம் இடத்தில் சஞ்சரித்து உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே விதியை மாற்றும் ஆற்றல் வியாழனின் பார்வைக்கு உண்டு. எதிர்ப்பு, வியாதி, கடன், வழக்கு, உடல் நிலை, இடம், தொழில் மாற்றங்கள் போன்ற அனைத்திலும் மனத்திற்கு பிடித்த விதத்தில் மாற்றங்கள் வரும் விதத்தில் கிரக நிலைகளின் சஞ்சாரம் இருக்கிறது.

வருடத் தொடக்கத்தில் சுக ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரித்து வருடம் தொடங்கு
கிறது. எனவே சுகங்
களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும் ஆண்டாக இதை கருதலாம். ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று 10–ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதை குருவும் பார்க்கிறார். எனவே சகோதர வழியில் ஒத்துழைப்பு அதிகமாகவே இருக்கும். உங்களுடன் ஒட்டி உறவாடி ஆதரவாக இருப்பர். எதையோ மனதில் நினைத்துக் கொண்டு இதுவரை விலகியிருந்த உடன்பிறப்புகள் அதன் உண்மை நிலையை புரிந்து கொண்டு உங்களோடு விரும்பி வந்து சேருவர்.

தொழில் முன்னேற்றம் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். காரணம் 10–ல் உச்சம் பெற்ற செவ்வாயை குரு பார்க்கிறார். குருமங்கள யோகத்தோடு தொழில் ஸ்தானம் பலம் பெறுவதால் உங்கள் தொழில் நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விவாகங்கள் நடைபெறலாம். அதை நீங்கள் முன்நின்று நடத்தி வைக்கலாம். பதவி உயர்வை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். 

10–க்குடைய சனி உச்சம் பெற்று 7–ல் சஞ்சரிப்பதால் கணவன் வேலைக்கு போகவில்லையே என்று கவலைப்படும் மனைவிக்கும், மனைவி வேலைக்கு போகவில்லையே, வருமானத்தை தேடி தரவில்லையே என்று கவலைப்படும் கணவன்மார்களுக்கும் புதிய தொழில் வாய்ப்புகளும் அந்நிய தேச யோகங்களும் வந்து சேரும்.

ராகுகேதுக்களின் ஆதிக்கம் தான் உங்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஜென்மத்தில் கேது இருந்தால் கவனமாக செயல்பட வேண்டும் என்று சொல்வார்கள். மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்களில் முழுக்கவன
மும் நீங்கள் செலுத்துவது நல்லது. இல்லையேல் ஆதாயம் ஏட்டில் எழுதி வைத்திருக்கலாம், ஆனால் உங்கள் எதிரில் வந்து நிற்காது. சர்ப்ப சாந்திகள் உங்களுக்கு அனுகூலம் தரும். நாக ஸ்தலத்தில் முறையாக நீங்கள் யோகபலம் பெற்ற நாளில் செய்து கொண்டால் கற்பனைக்கு எட்டாத அளவு முன்னேற்றம் வந்து சேரும்.

28–5–2013 முதல் 31–12–2013 வரை

குரு மிதுனத்தில் சஞ்சரிக்கும் நேரமிது. குரு பார்வை படும் இடமெல்லாம் பொன் கொழிக்கும் இடமாக மாறும். அந்த அடிப்படையில் 7, 9, 11 ஆகிய இடங்களில் குருவின் பார்வை பதிகிறது. தொட்டதெல்லாம் துலங்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் உங்களது பெயரும் இடம் பெறப் போகிறது. வினோதமான காரியங்கள் பல செய்து உங்கள் பெயரை நிலைநாட்டிக் கொள்வீர்கள்.

தந்தை வழிச் சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அகலும். தானாகவே பாகப்பிரிவினை செய்து கொள்ள சம்மந்தப்பட்டவர்கள் முன்   வருவர். வெளிநாட்டு தொடர்பு விருத்திக்கும். விருப்பங்கள் நிறைவேறும். நல்ல திருப்பங்கள் உருவாகும். மறுப்பு சொல்லியவர்கள் எல்லாம் மனம் மாறி உங்களுக்கு ஒத்துவருவர். பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகையும் வந்து சேரும்.

பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். திருமண வயதடைந்தும் தேடி வைத்த பொருளில் தங்கத்தை இதுவரை வாங்கவில்லையே என்ற ஏக்கம் தீரும்.

பொருள் வளம் பெருகும். பொதுநலத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நாணயப்பாதிப்பு இல்லாத வாழ்க்கையை நடத்தப் போகிறீர்கள்.

குருவின் வக்ர காலம்!

குரு உங்கள் ராசியை பொறுத்தவரை 9, 12–க்கு அதிபதியாகிறார். அது வக்ரம் பெறும் பொழுது நன்மைகளையே உங்களுக்குச் செய்வார். விரயாதிபதி வக்ரம் பெற்றால் செலவிற்கேற்ற பணம் வந்து கொண்டே இருக்கும். வீட்டிற்கு தேவையான மின்சாதன பொருட்களையும், கட்டில், பீரோ, கம்ப்யூட்டர், மிக்சி, கிரைண்டர் என்று விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் கிடைக்கும்.

தந்தை வழி உறவில் பகை ஏற்படாமல் பார்த்து கொள்வது நல்லது. பங்காளிப் பகையால் ஒரு சில காரியங்கள் தடை ஏற்படலாம். குருவிற்
குரிய ஸ்தலங்களை தேர்ந்தெடுத்து வழிபாடு செய்து வருவதன் மூலம் குழப்பங்களிலிருந்து விடுபட இயலும்.

சனிசெவ்வாய் பார்க்கும் காலம்!

எந்த கிரகத்தை எந்த கிரகம் பார்த்தால் நல்லது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இரண்டு பகை கிரகங்களின் பார்வை ஏற்படும் போது மோதல்களும், முன்னேற்ற தடைகளும் தான் ஏற்படும்.

அதிலும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஒரு கிரகமாக பங்கு பெறுவதால் தான் அதன் பார்வை காலத்தில் பக்கபலமாக இருப்பவர்களை அனுசரித்து செல்வதும், பணம் கொடுக்கல் வாங்கல்களில் கவனத்துடன் செயல்படுவதும், பிறரை விமர்சிப்பதை தவிர்ப்பதும், பிரச்சினைகள் உருவாக£மல் நடந்து கொள்வதும் உங்கள் கையில் தான் இருக்கிறது.

விதியை வெல்ல யாராலும் முடியாது என்றாலும், நமது மதியால் ஓரளவாவது அதன் கடுமையை குறைத்து கொள்ள இயலும். சனியின் வக்ர
காலத்தில் தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். ஒப்பந்தங்களில் யோசித்துக் கையெழுத்திடுவது நல்லது.

பெண்களுக்கான ஜோதிடப் பலன்கள்


பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு வருடத் தொடக்கம் வசந்தமாக அமையும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தாய்வழி ஆதரவு பெருகும். பெற்றோர் வழியில் வரவு உண்டு. உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொண்டு உங்கள் பணிக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். கணவன்மனைவிக்கும் கனிவு கூடும். பாசம் பொங்கும். பங்குதாரர்களாக இருவரும் இருந்து தொழில் நிலையத்தை இயக்கும் சூழ்நிலை உருவாகும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்போடு இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

குருப்பெயர்ச்சியும் சாதகமாக இருக்கிறது. பொதுவாக ஜென்மத்தில் கேது, ஏழில் ராகு அமர்ந்து சர்ப்ப தோஷத்தை உருவாக்குவதால், யோகபலம் பெற்ற நாளில் ஜாதக ரீதியாக அனு  கூலம் பெற்ற தெசாபுத்தியில் சர்ப்ப சாந்திகளை செய்து கொள்வது நல்லது. சனிசெவ்வாய் பார்வைக் காலத்தில் செலவுகள் கூடலாம். விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது. அன்புடன் நடந்து கொள்வதன் மூலம் ஆதரவு கூடும்.நன்றி 
தினத்தந்தி
Share this page :
⊗ SRI GURUMISSION TRUST Bank Balance ⊗
2, 34,325

.

Function Paper Cuttings

Photos

.


.

 
Contact Us :
SRI GURUMISSION TRUST
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
Published by Ujiladevi