மனப்பூர்வமான ஈடுபாடு ...



chinmayananda swami


வெற்றி தோல்வி சகஜம்


* நாம் செய்யும் பணியில் வித்தியாசம் பாராட்ட வேண்டியதில்லை. எந்தப் பணியையும் கடமை உணர்ச்சியுடன் செய்ய வேண்டியது தான் முக்கியம். அதுவே இறைவனுக்கு உகந்ததாகும்.

*
உலகத்தின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், தத்துவமேதைகள், பக்திமான்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் நமக்கு தியாகஉணர்வின் மேன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன.

சின்மயானந்தா ஸ்வாமி


*
வாழ்வில் மக்கள் பணியைச் செய்ய ஆளாக்கி விட்டவன் இறைவன் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் ஒருபோதும் "நான் செய்தேன் ' என்று வீண்பெருமையாகவோ, அகங்காரமோ இல்லாதவர்களாய் தங்கள் பணிகளை கடமையுணர்வோடு செய்வார்கள்.

*
தியாகசீலர்கள் வெற்றி பெற்றபோதும் இறுமாப்பு கொள்ளமாட்டார்கள். தோல்வி ஏற்பட்டாலும், மனம் தளர மாட்டார்கள். எப்போதும் மனதில் அமைதியும் சாந்தமும் இருந்தால் முகத்தில் தெய்வீகஒளியைக் காணமுடியும்.

*
நல்லொழுக்கம், கொள்கையில் பிடிப்பு, மனப்பூர்வமான ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வு இருக்குமானால், செய்யும் செயல்கள் யாவும் பூரணமானதாக அமையும். அதனால் இம்மண்ணுலகே பயன் பெறும்.

-
சின்மயானந்தர்
நன்றி தினமலர்


சுவாமி சின்மயானந்தர்


Share this page :
⊗ SRI GURUMISSION TRUST Bank Balance ⊗
2, 34,325

.

Function Paper Cuttings

Photos

.


.

 
Contact Us :
SRI GURUMISSION TRUST
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
Published by Ujiladevi